×

அழகப்பாபுரத்தில் ஓட்டு வீடுகளை குறிவைத்து திருடும் கும்பல் முகாம்

காரைக்குடி, நவ. 8: காரைக்குடி அழகப்பாபுரம் பகுதியில் தொடர்ந்த இரண்டு நாட்களாக ஓட்டுவீட்டின் மேற்கூரையை பிரித்து உள்ளே இருங்கி பொருட்கள் திருடப்பட்டு வருவதாக அப்பகுதியினர் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக எந்த துப்பும் கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்.  காரைக்குடி போலீஸ் உட்கோட்ட எல்லைக்கு உட்பட்டு 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். போலீசார் பற்றாக்குறையால் தொடர் கண்காணிப்பு செய்ய முடியாத நிலை உள்ளது. ஊர் முழுவதும் கண்காணிப்பு கேமரா பொறுத்தப்பட்டு இருந்தும் வழிப்பறி, டூவீலர்களை திருடி செல்வது போன்ற சம்பங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.  அழகப்பாபுரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட வள்ளலார் தெரு பகுதியில் தொடர்ந்து இரண்டு நாட்களாக திருட்டு கும்பல் ஓட்டு வீடுகளின் மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கி தங்கள் கைவரிசையை காட்டி வருகின்றனர். ஒரே நாளில் 3 ஓட்டு வீடுகளில் உள்ளே இறங்கி கையில் கிடைத்ததை எடுத்து சென்றுள்ளனர்.  இந்நிலையில் நேற்று முன்தினம் இரவும் அதேபகுதியில் திருட முயற்சி செய்துள்ளனர்.

அப்பகுதியில் இருந்து சிசிடிவி கேமராவில் 20 வயது மதிக்கதக்க வலிபர் ஒருவர் கடந்து சென்றது தெரிய வந்தது. தவிர இவர் குறிப்பிட்ட சில வீடுகளை நோட்டம் விட்டு சென்ற காட்சிகளும் பதிவாகி உள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் அச்சத்துடன் இருக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது. இந்த திருட்டு குறித்து உரிய துப்பு கிடைக்காததால் போலீசார் திணறி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,`` இப்பகுதியில் போதிய தெருவிளக்குகள் இல்லாததால் திருட்டு சம்பங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக திருட்டு கும்பல் இப்பகுதியில் முகாமிட்டு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நிம்மதியாக உறங்க முடியவில்லை’’ என்று கூறினர்.

Tags : gang ,robbers ,Alagapuram ,drive-ins ,
× RELATED மத்தியப் பிரதேசத்தில் உதவி சார்பு...