×

மன்னார்குடி அருகே பாமணியில் தோட்டக்கலை பயிர்களில் மூடாக்கு சாகுபடி பயிற்சி

மன்னார்குடி, நவ. 8: மன்னார்குடி அருகே பாமணி கிராமத்தில் விவசாயிகளுக்கு தோட்டக் கலைப் பயிர்களில் களைகளை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து மூடாக்கு சாகுபடி செய்முறை விளக்கம் மற்றும் வயல் விளக்க செய்திடல் பயிற்சி நடைபெற்றது.
மன்னார்குடி வேளாண்மை உதவி இயக்குனர் சரஸ்வதி, தோட்டக்கலை உதவி இயக்குனர் இளவரசன் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் மன்னார் குடி அருகே பாமணி கிராமத்தில் விவசாயிகளுக்கு தோட்ட கலைப் பயிர்களில் களைகளை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து மூடாக்கு சாகுபடி செய்முறை விளக்கம் மற்றும் வயல் விளக்க செய்திடல் பயிற்சி நடைபெற்றது.இப்பயிற்சியில் தோட்டக்கலை உதவி அலுவலர் தினேஷ் பாபு, தோட்டக் கலைப் பயிர்களில் மண் மூடாக்கு அமைத்து சாகுபடி செய்யும் முறையினை விவசாயிகளிடம் தெளிவாக எடுத்து கூறினார். இம்முறையால் ஏற்படும் நன்மைகள், களை நிர்வாகம், நீர்சேமிப்பு, நீராவி போக்கை கட்டுப்படுத்துதல், அதிக மகசூல் பெறுதல், பூச்சி நோய் தாக்குதல் கட்டுப்படுத்துதல் மற்றும் சாகுபடி செலவினங்களை குறைத்து அதிக மகசூல் பெறும் தொழில் நுட்பம் சம்பந்தமாக விளக்கங்களை கூறினார். இறுதியில் விவசாயிகளுக்கு ஏற்படுகின்ற தொழில்நுட்ப சந்தேகங்களுக்கு பதிலளித்தார்.நிகழ்ச்சியில், தோட்டக்கலை உதவி அலுவலர்கள் பாலசுந்தரம், விஜயகுமார் மற்றும் தொழில்நுட்ப மேலாளர்கள்(அட்மா) ஜெயந்தி, வேம்பு ராஜ லட்சுமி, கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் விவசாயி மாரிமுத்து நன்றி கூறினார்.


Tags : Mannargudi ,Bamani ,
× RELATED திருவாரூர் அருகே வீடு கட்டும்போது 5...