×

தினக்கூலியாக ரூ.380 வழங்க கோரி மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கம் தொடர் வேலைநிறுத்தம்

பெரம்பலூர், நவ.8: தினக்கூலியாக ரூ.380 வழங்க வலியுறுத்தி பெரம் பலூரில் தமிழ்நாடு மின் வாரிய ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தினர் 150பேர் 7வது நாளாக நேற்றும் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தினக் கூலியாக ரூ380 வழங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண் டும் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி, பெரம்பலூரில் தமிழ்நாடு மின் வாரிய ஒப்பந்தத் தொழி லாளர்கள், கடந்த 1ம்தேதி முதல் தொடர் வேலைநிறு த்தப் போராட்டத்தில் ஈடுப ட்டு வருகின்றனர். இதன் ஒருகட்டமாக 4ரோடு அரு கேயுள்ள மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் முன் 5ம்தேதி முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்த தோடு, மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று (7ம் தேதி) 7வது நாளாக கோரிக்கைகளை வலியுறு த்தி தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் மொத்த முள்ள 220 பேர்களில் 70பேர் பணியில் ஈடுபட்டுவரும் நிலையில் மீதமுள்ள 150 பேர் தொடர்வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வேலை நிறுத் தப் போராட்ட த்தில் சங்கத் தலைவர் கனகராஜ், செயலாளர் மணி, பொருளாளர் அரவிந்த், மாநில செயற் குழு உறுப்பினர் திலகர் உள்ளிட்ட 150பேர் பங்கேற் றுள்ளனர்.தொடர் போராட் டத்தில் ஈடுபட்டிருப்பதால், மின்சார வாரியத்தில் மேற் கொள்ளப்படும் மின்கம்பங் கள் நடும்பணி, குழிகள் தோண்டும் பணி, உயரழு த்த மின்கம்பி பராமரிப்புப் பணிகள், மின்தடை பழுது உள்ளிட்டப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

Tags : strike ,Power Workers' Union ,
× RELATED மதுரை ஒத்தக்கடையில் வணிகர்கள்,...