மண்மங்கலம் முதல் வேலாயுதம்பாளையம் வரை பழுதடைந்த விபத்து தகவல் தொலைபேசிகளால் அவதி

கரூர், நவ. 8: விபத்து தகவல் தொலைபேசியை சீரமைக்க வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.கரூர்- சேலம்தேசிய நெடுஞ்சாலையில் விபத்து போன்ற அவசர உதவி தேவைப்படுபவர்கள், இதுபற்றிய தகவல்களை பரிமாறிக்கொள்வதற்கு வசதியாக தனி தொலைபேசி வசதி ஏற்படுத்தியுள்ளனர். கரூர் மண்மங்கலம் முதல் வேலாயுதம்பாளையம் வரை 8 இடங்களில் இவ்வாறு வைக்கப்பட்டுள்ள தகவல் தொலைபேசிகள் வேலை செய்யவில்லை. பராமரிக்காததால் செயல்படாமல உள்ளது. இதனை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories:

>