வேலாயுதம்பாளையத்தில் உடைந்து சேதமடைந்த ரவுண்டானா

கரூர், நவ. 8: கரூர் வேலாயுதம்பாளையத்தில் உடைந்த நிலையில் உள்ள ரவுண்டானாக்கள் புதுப்பிக்கப்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியில் இருந்து நொய்யல், வேலூர், கரூர், டிஎன்பிஎல் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு சாலை பிரிகிறது.நான்கு வழி போக்குவரத்து காரணமாக இந்த பகுதியில் மூன்றுக்கும் மேற்பட்ட ரவுண்டானாக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தந்த பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் எளிதாக பிரிந்து செல்லும் வகையில் இந்த ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒரு ரவுண்டானா மட்டும் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதால் சிதிலமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எனவே, உடைந்த நிலையில் உள்ள இதனை சீரமைத்து புதுப்பித்து தர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் இதனை பார்வையிட்டு புதுப்பிக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories:

>