அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்

மதுராந்தகம், நவ. 8: அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில்,  வேடந்தாங்கல் பகுதியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.காஞ்சி தெற்கு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி வேடந்தாங்கல் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நேற்று நடந்தது.தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜீ.தம்பு வரவேற்றார். எம்பி ஜி.செல்வம், எம்எல்ஏ எஸ்.புகழேந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.முகாமில் கற்பக  விநாயகா மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு சர்க்கரை நோய், இதய நோய், தோல், கண் ஆகியவற்றுக்கு சிகிச்சை அளித்தனர். குழந்தைகள் மருத்துவமும் மேற்கொள்ளப்பட்டது.  இதில், 400க்கும் மேற்பட்ட  பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்பட 600 பேர் பயனடைந்தனர்.ஒன்றிய திமுக துணை செயலாளர் வேதாசலம், வேடந்தாங்கல் ஊராட்சி திமுக செயலர் வேணு, நிர்வாகிகள் பிரபாகரன், அசோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>