பிரதம மந்திரி கவுரவ ஊக்கத்தொகை திட்டம்

காஞ்சிபுரம், நவ.8: காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் அசோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு.காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரதம மந்திரி கவுரவ ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் இணைவதற்கு இன்று கடைசி நாளாகும். இதில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ₹6 ஆயிரம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் சிறு, குறு மற்றும் பிற விவசாயிகள் இணைந்து பயன் பெற முடியும்.இதுவரை சேராத விவசாயிகள். இன்றே தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள சிட்டா, ரேஷன் கார்டு நகல், ஆதார் நகல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், மொபைல் எண் ஆகியவற்றுடன் பொது சேவை மையம், வேளாண்  உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது PMKISAN என்ற இணையதளத்தில்விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு வட்டார வேளாண் உதவி இயக்குநரை தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>