×

குடிநீர், கழிவுநீர் பிரச்னையா? நாளை நடக்கும் திறந்தவெளி கூட்டத்தில் புகாரளிக்கலாம்: வாரியம் அறிவிப்பு

சென்னை: குடிநீர், கழிவுநீர் பிரச்னை குறித்து, நாளை நடக்கும் திறந்தவெளி கூட்டத்தில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம், என குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.இதுகுறித்து, சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:  சென்னை குடிநீர் வாரியம் சார்பில் மாதம்தோறும் 2வது சனிக்கிழமை திறந்தவெளி குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த மாதத்துக்கான கூட்டம் வரும் 9ம் தேதி (நாளை) காலை 10 மணி முதல்  பிற்பகல் 1 மணி வரை,  குடிநீர் வாரியத்தின் அனைத்து பகுதி அலுவலகங்களிலும் நடக்கிறது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று குடிநீர், கழிவுநீர் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் மற்றும் குடிநீர், கழிவுநீர் வரி மற்றும் கட்டணங்கள், நிலுவையில் உள்ள குடிநீர், கழிவுநீர்  புதிய இணைப்புகள் தொடர்பான சந்தேகங்களை நேரில் மனுக்கள் வாயிலாக விண்ணப்பித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

 மேலும், மழைநீர் சேகரிப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான விளக்கங்களையும் இக்கூட்டத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு பகுதி அலுவலக கூட்டமும் ஒரு மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும். கடந்த  மாதம் நடந்த கூட்டத்தில், குடிநீர் கழிவுநீர் சம்பந்தமாக 28 மனுக்கள் பெறப்பட்டு, 17 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பணி முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 11 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : announcement ,Board ,meeting ,
× RELATED வீரமரசன்பேட்டை மின்வாரிய...