×

சீட்டு நடத்தி 60 லட்சம் மோசடி சப் - இன்ஸ்பெக்டர் மனைவியுடன் கைது

சென்னை: மடிப்பாக்கத்தில் சீட்டு நடத்தி 60 லட்சம் மோசடி செய்த சப்-இன்பெக்டர் மற்றும் அவரது மனைவியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் ஜான்பீட்டர் (53). இவர், தரமணி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜோசபின் ராணி. இவர், மடிப்பாக்கம் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் ₹1 லட்சம் முதல்  ₹3 லட்சம் வரை சீட்டு நடத்தி வந்தள்ளார். ஆனால், சீட்டு கட்டியவர்களுக்கு முதிர்வு தொகையை கொடுக்காமல், அலைக்கழித்து வந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் சம்பவம் குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதன்படி மத்திய  குற்றப்பிரிவு போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது சீட்டு நடத்தி பணத்தை மக்களிடம் கொடுக்காமல் ஏமாற்றி வந்தது தெரியவந்தது.

அதைதொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் இரவு பணி முடிந்து நேற்று காலை வீட்டிற்கு சென்ற போது மத்திய குற்றப்பிரிவு போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்பீட்டர் மற்றும் அவரது மனைவி ஜோசபின் ராணியை கைது செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர்  ஒருவர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : inspector ,
× RELATED ஆந்திர மாநிலத்தில் பொதுமக்கள்...