×

மர்ம காய்ச்சலுக்கு பள்ளி சிறுமி பரிதாப பலி: பெரம்பூரில் பரபரப்பு

பெரம்பூர்: பெரம்பூரில் மர்ம காயச்சலுக்கு சிறுமி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.பெரம்பூர், ரமணா நகர், ஜவகர் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (எ) ஜோஸ்வா. அதே பகுதியில் சொந்தமாக ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி கிரேசி. தம்பதிக்கு, மூன்று பெண் குழந்தைகள். இதில், 2வது மகள் ஜெனோபா  லில்லி (8), பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தாள்.கடந்த 4 நாட்களாக ஜெனோபா லில்லிக்கு காய்ச்சல் இருந்துள்ளது. இதனால், பெரம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதித்து, 2 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று முன்தினம் காலை சிறுமிக்கு காய்ச்சல்  அதிகமானதால், அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனையடுத்து, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிறுமியை பெற்றோர் அனுமதித்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் 12 மணியளவில் சிறுமி இறந்தாள். டெங்கு காய்ச்சல் பாதிப்பால் சிறுமி இறந்தாக  தகவல் பரவியதால், பெரம்பூர் ரமணா நகர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், மருத்துவமனை சார்பில் வழங்கப்பட்ட இறப்பு சான்றிதழில் டெங்கு காய்ச்சல் என குறிப்பிடப்படவில்லை.பருவமழை தொடங்கிய நாள் முதல் வடசென்னையில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பெரம்பூரில் சிறுமி மர்ம காய்ச்சலால் உயிரிழந்துள்ளது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி  உள்ளது.


Tags : Parabumper ,
× RELATED திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே மர்ம...