×

சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி மருத்துவர் நியமிக்கப்படுவர் நாகர்கோவில் உட்பட 25 இஎஸ்ஐ மருந்தகங்களில் ‘ஆயுஷ்’ பிரிவுகள்

நாகர்கோவில், நவ.7: தமிழகம் முழுவதும் 25 இஎஸ்ஐ மருந்தகங்களில் ஆயுஷ் பிரிவுகள் தொடங்க தமிழக அரசால் அனுமதி வழங்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தொழிலாளர் நலனுக்காக இஎஸ்ஐ மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. தொழில் நிறுவனங்களில் பணியாற்றுகின்ற காப்பீடு நபர் மற்றும் அவரது குடும்பத்தினர் இதன் வாயிலாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் தமிழகத்தில் இஎஸ்ஐ மருந்தகங்களில் புதிதாக ஆயுஷ் பிரிவுகளையும் தொடங்க வேண்டும் என்று மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் தரப்பில் புதுடெல்லியில் உள்ள இஎஸ்ஐ கார்பரேஷனின் துணை மருத்துவ ஆணையருக்கு (ஆயுஷ்) வேண்டுகோள் வைத்திருந்தார். அதன்படி தமிழகத்தில் உள்ள மருந்தகங்களில் ‘ஆயுஷ்’ பிரிவு தொடங்க இஎஸ்ஐ விதிமுறைகளின்படி அனுமதி வழங்கங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் தமிழக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநரின் வேண்டுகோளை தமிழகத்தில் 25 இஎஸ்ஐ மருந்தகங்கள் தேர்வு செய்யப்பட்டு சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி மற்றும் யுனானி பிரிவுகள் தொடங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 அடையார், கோடம்பாக்கம், சைதாபேட்டை-1, தண்டையைார்பேட்டை, அம்பத்தூர், பூவிருந்தவல்லி, பீளமேடு, பெரியநாயக்கன்பாளையம், சேலம் (ஸ்டேடிக்), நாகர்கோவில், முனிச்சாலை, பழங்காநத்தம், பொன்னாகரம், திருநெல்வேலி, சிவகாசி, ஓசூர், சிங்கநல்லூர்(எஸ்), திருச்சி (ஸ்டேட்டிக்) ஆகிய 18 இடங்களில் சித்தா பிரிவுகளும், பல்லாவரம், தாம்பரம், திருநகர், ராஜபாளையம் ஆகிய 4 இடங்களில் ஆயுர்வேத பிரிவுகளும், ஆவடியில் ஹோமியோபதியும், தூத்துக்குடி, ராணிபேட்டை 2 ஆகிய இடங்களில் யுனானி பிரிவுகளும் தொடங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த பிரிவுகளில் தலா ஒரு மருத்துவர் வீதம் 25 மருத்துவ அலுவலர்கள், ஒரு மருந்தாளுநர் வீதம் 25 மருந்தாளுநர்கள் என்று 50 பணியிடங்கள் புதியதாக தோற்றுவிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Tags : Siddha ,Homeopathy ,pharmacies ,Ayush ,Unani Physician ,Nagercoil ,ESI ,
× RELATED உலக ஹோமியோபதி தினத்தை முன்னிட்டு...