×

உள்ளாட்சி தேர்தல் 2732 வாக்குச்சாவடி அலுவலர்கள் பெயர் இணையதளத்தில் விரைவில் பதிவேற்றம்

விருதுநகர், நவ.7: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் வாக்குப்பதிவு அலுவலர்கள் விபரங்களை பதிவேற்றம் செய்வதற்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், உள்ளாட்சி தேர்தலில் மாவட்டத்தில் உள்ள 7 நகராட்சிகளில் ராஜபாளைம் 112, திருவில்லிபுத்தூர் 66, அருப்புக்கோட்டை 72, சிவகாசி 62, சாத்தூர் 25, விருதுநகர் 64, திருத்தங்கல் 43 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 444 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது9 பேரூராட்சிகளில் செட்டியார்பட்டி 15, சேத்தூர் 18, மல்லாங்கிணறு 15, மம்சாபுரம் 19, காரியாபட்டி 15, சுந்தரபாண்டியம் 15, எஸ். கொடிக்குளம் 15, வ.புதுப்பட்டி 16, வத்திராயிருப்பு 18 என 146 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

11 ஊராட்சி ஒன்றியங்களில் அருப்புக்கோட்டை 154, விருதுநகர் 288, காரியாபட்டி 149, திருச்சுழி 162, நரிக்குடி 177, ராஜபாளையம் 214, திருவில்லிபுத்தூர் 159, வத்திராயிருப்பு 118, சிவகாசி 326, வெம்பக்கோட்டை 211, சாத்தூர் 184 என மொத்தம் 2142 வாக்குச்சாடிகள் அமைக்கப்பட்டுள்ளன. நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் மொத்தம் 2732 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.2732 வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் வாக்குப்பதிவு அலுவலர்களின் பெயர், பணிபுரியும் அலுவலகங்கள் மற்றும் விபரங்களை பெற்று மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி துவங்க இருக்கிறது. வாக்குச்சாவடியில் பணியாற்ற தேவையான அலுவலர்களை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் உரிய படிவத்தில் பெற்று அந்தந்த துறையின் தலைமை அலுவலர்களால் வரும் வெள்ளிக்கிழமைக்குள் அனுப்ப வைக்க வேண்டும் என்றார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார், திட்ட இயக்குநர்கள் சுரேஷ், தெய்வேந்திரன் அனைத்து துறை தலைமை அலுவலர்கள் பங்கேற்றனர்.

Tags : Election ,Ballot Officers ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...