×

குப்பைகளையும் அள்ளுவதில்லை ஏலம்விட வலியுறுத்தல் கலெக்டர் சிவஞானம் தகவல் திருச்சுழி அருகே ஒரு கால்வாய்க்காக 2 கிராமமக்கள் மோதல்

திருச்சுழி, நவ.7: திருச்சுழி அருகே கால்வாய் ஆக்கிரமிப்ைப அதிகாரிகள் அகற்ற கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சுழி அருகே ஆக்கிரமித்துள்ள வரத்து கால்வாயை அகற்ற முற்பட்ட போது இடையங்குளம் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு .  திருச்சுழி அருகே மைலி கிராமம் உள்ளது. இங்கு சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பம் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தின் அருகே பாசன வசதி பெறும் வகையில் மைலி மற்றும் நத்தக்குளம் கண்மாய் உள்ளது. பல வருடங்களுக்கு முன்பு திருச்சுழி தாலுகாவிற்குட்பட்ட இலுப்பைக்குளம் கண்மாய் நீர் நிரம்பி மைலி, நத்தக்குளம்  கண்மாய்களுக்கு நீர்  வந்தடைந்தது. காலப்போக்கில் தடம் மாறி மைலி கண்மாய்க்கு வரக்கூடிய நீர் காரியாபட்டி தாலுகாவிற்குட்பட்ட இடையங்குளம் கண்மாய்க்கு சென்றது. அக்கண்மாய் நிரம்பிய பின்பு சாலையோர கால்வாய் வழியாக  மைலி கண்மாய்க்கு நீரை கொண்டு  விவசாயம் செய்து வந்தனர். தற்போது அக்கண்மாய் நீரை அவ்வழியாக கொண்டு செல்ல இடையங்குளத்தை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மைலி கிராமத்தினர் தங்களது வரைபடத்தில் உள்ள கால்வாய் இடையங்குளத்தை சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், அதனை மீட்டு தரும்படியும் காரியபட்டி தாசில்தாரிடம் புகார் அளித்தனர்.

ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக நேற்று முன்தினம் தாசில்தார் மற்றும்  அதிகாரிகள் வருவதாக கூறியிருந்தனர். இதனால் மைலி கிராமத்தினர் பணிகளுக்கு  செல்லாமல் காத்திருந்தனர். ஆனால் யாரும் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த  மைலி கிராமத்தினர் நரிக்குடியிலிருந்து திருச்சுழி செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனிடையே நேற்று காரியாபட்டி, திருச்சுழி தாசில்தார்கள் ஆக்கிரமிப்பை அகற்ற வந்தனர். அப்போது இடையங்குளம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு சம்பவ திருச்சுழி டிஸ்பி சசிதர் இரு கிராம மக்களையும் அழைத்து இன்னும் 15 தினங்களில் சர்வே எடுத்து முறைப்படி வரத்து கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இதனால் இரு கிராம மக்களும் சமாதானம் அடைந்தனர். மேலும் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Auctioneer ,Sivagnanam ,
× RELATED சென்னை நீதிபதி உள்பட உயர்நீதிமன்ற நீதிபதிகள் 7 பேர் இடமாற்றம்