×

மருந்துக்கடைகளுக்கு அறிவுறுத்தல் திருப்புவனத்தில் இருந்து அருப்புக்கோட்டைக்கு குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் தீவிரம்

அருப்புக்கோட்டை,  நவ.7: திருப்புவனத்தில் இருந்து அருப்புக்கோட்டைக்கு குடிநீர் கொண்டு  வருவதற்கு  பகிர்மான குழாய் பதிக்கும் பணி ஜரூராக நடந்து வருகிறது. இதனை சாத்தூர் ராமச்சந்திரன்  எம்எல்ஏ ஆய்வு செய்தார்.  
அருப்புக்கோட்டை நகருக்கு திருப்புவனம் வைகை ஆற்றில் இருந்து  குடிநீர் பம்பிங் செய்யப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.  மழையின்மை காரணமாக வைகை ஆறு வறண்டதால் வைகையின் மூலம் குடிநீர் விநியோகம் செய்வது தடைப்பட்டது.   தற்போது மழை பெய்ததால் வைகையில் தண்ணீர் ஓடுகிறது. அருப்புக்கோட்டைக்கு குடிநீர் பம்பிங் செய்யப்படும் திருப்புவனம் நீரேற்றும் நிலையம் வரை தண்ணீர் செல்கிறது.  இதனால் குடிநீர் பம்பிங் செய்வதற்கு வேண்டிய ஏற்பாடுகளை நகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.  இந்நிலையில் இந்த திட்டத்திற்காக பதிக்கப்பட்ட குழாய்கள் 40 ஆண்டு காலம் ஆகிவிட்டது.  தற்போது 36 கி.மீ தொலைவிற்கு 26 கோடி ரூபாய் செலவில் புதிய குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது.  கட்டங்குடியிலிருந்து 29 கி.மீ தொலைவிற்கு குழாய் பதிக்கும் பணி முடிவடைந்து விட்டது.  திருப்புவனத்திலிருந்து 7 கி.மீ தொலைவிற்கு குழாய் பதிக்கும் பணி நடைபெறவில்லை.

 இந்நிலையில் நகரில் குடிநீர் தட்டுப்பாடு இருப்பதால் 7 கி.மீ தொலைவில் உள்ள பழைய பகிர்மான குழாய்களுடன் புதிதாக பதிக்கப்பட்ட 29 கி.மீ பகிர்மான குழாய்களை இணைத்து குடிநீர் பம்பிங் செய்து நகருக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படவுள்ளது. அதற்கான பணிகள் நடந்து வருகிறது.  இதில் புதிய குழாயாக இருப்பதால் ஆங்காங்கு பகிர்மான குழாயில் காற்று அடைப்பட்டு ஏர்லாக் ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்யும் பணியில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணியினை சாத்தூர் ராமச்சந்திரன் எம்எல்ஏ அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார்.  பின்னர் அவர் கூறுகையில், இந்த வார இறுதிக்குள் பதிக்கப்பட்ட பகிர்மான குழாயில் உள்ள சிறு சிறு பிரச்சனைகளை சரிசெய்து குடிநீர் பம்பிங் செய்யப்பட்டு நகருக்கு வைகை குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்றார். அப்போது முன்னாள் ஒன்றிய சேர்மன் சுப்பாராஜ், முன்னாள் நகராட்சி தலைவர் சிவப்பிரகாசம், நகராட்சி பொறியாளர் சேர்மக்கனி, திமுக நகரச் செயலாளர் மணி, மாநில நெசவாளர் அணிச் செயலாளர் பழனிச்சாமி  மற்றும் அலுவலர்கள் இருந்தனர்.

Tags : Introduction ,Aruppukkottai ,
× RELATED அருப்புக்கோட்டை காந்திநகர் பஸ்...