×

ராஜபாளையம் அருகே குடியிருப்பில் சிதறி கிடக்கும் குப்பைகள்

ராஜபாளையம், நவ.7: ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூர் குடியிருப்பு பகுதியில் சிதறிக்கிடக்கும் குப்பையால் சுகாதாரக் கேடு நிலவுகிறது. ராஜபாளையம் தாலுகா தெற்குவெங்காநல்லூர்  ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் அரசிற்கு வருவாய் ஈட்டக்கூடிய பகுதியாக இருக்கின்றன. எனினும்  இப்பகுதியில் எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தராமல் இருப்பதால் மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். குடியிருப்பு மற்றும் தொழிற்சாலைகளில் ஏற்படும் கழிவுகளை சேமிப்பதற்கான இடம் தேர்வு செய்து வைக்கவில்லை. இதனால் ஆங்காங்கே குப்பைகளை கொட்டி தீ மூட்டி வருகின்றனர். புகை மூட்டம் ஏற்பட்டு மூச்சுத் திணறல் மற்றும் தொற்றுநோய் ஏற்படும் அபாயமும் இருந்து வருகிறது. தொடர்ந்து பலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இருந்து வருகிறது. எனவே குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், உடனடியாக இப்பகுதியில் குப்பைகளை ஆங்காங்கே சிதறவிடாமல் அதற்கான தொட்டிகள் அமைத்து போதிய சுகாதார பணியாளர்களை வேலையில் அமர்த்த வேண்டும்.  சுகாதார பணிகளை தினமும் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

Tags : apartment ,Rajapalayam ,
× RELATED காசாகிராண்டின் புதிய அடுக்குமாடி குடியிருப்பு