×

பாஜ அரசை கண்டித்து சாத்தூரில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

சாத்தூர், நவ.7: பாஜக அரசை கண்டித்து சாத்தூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சாத்தூர் முக்ராந்தல்லில் மத்திய பாஜக அரசின் புதிய பொருளாதார கொள்கை, வேலையில்லாத் திண்டாட்டம், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சாத்தூர்  மாவட்ட தலைவர்கள் தளவாய் பாண்டியன், ராஜா சொக்கர் தலைமை வகித்தனர். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளரும் தமிழக மேலிட பொறுப்பாளருமான  சஞ்சய்தத், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் மயூரா ஜெயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.  சாத்தூர் நகரத்தலைவர் கருப்பசாமி, சாத்தூர் வட்டார தலைவர் சீனிவாசன் நன்றி கூனர்.

Tags : Congress ,protests ,BJP ,
× RELATED பாஜக அரசின் கையாலாகாத தன்மை : ப.சிதம்பரம் தாக்கு