×

கம்பம் பள்ளதாக்கில் விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறை

உத்தமபாளையம், நவ. 7: கம்பம் பள்ளதாக்கில் முதல்போகம் நெல் நடவு முடிந்த பின்பு களை எடுப்பு உள்ளிட்ட பணிகளுக்கு விவசாய கூலியாட்கள் கிடைக்காமல் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.கம்பம் பள்ளதாக்கில் உத்தமபாளையம், குச்சனூர், கம்பம், கூடலூர், காமயகவுண்டன்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலும் இரண்டுபோக நெல் விவசாயம் நடக்கிறது. இந்த வருடம் போதிய மழை இல்லாத நிலையில் முதல்போகம் தற்போதுதான் நடக்கிறது. பல ஊர்களிலும் விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களை பண்படுத்தி அதில் நாற்றுக்களை நட்டுள்ளனர். இப்போது வயல்களில் களை எடுப்பது, வயல்களில் சுற்றி உள்ள புல்வெளிகள், செடிகளை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்ய வேண்டும். இதற்காக விவசாய கூலிதொழிலாளர்களை நாடி வருகின்றனர்.கம்பம் பள்ளதாக்கில் விவசாய கூலிதொழிலாளர்கள் பெருமளவில் மாற்று வேலைகளுக்கு செல்ல தொடங்கிவிட்டனர். குறிப்பாக அதிகளவில் கட்டிட வேலைகளுக்கும், கேரளாவில் உள்ள ஏல தோட்டங்களில் வேலைக்கும் செல்கின்றனர். இந்த வேலைகள் ரெகுலராக கிடைப்பதால் விவசாய மராமத்து பணிகளுக்கு வரத்தயக்கம் காட்டுகின்றனர். இதனால் விவசாயிகள் பெரும் அவஸ்தையை சந்தித்து வருகின்றனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘கம்பம் பள்ளதாக்கில் வேலை இருக்கிறது. ஆனால் மாற்றுவேலைகளுக்கு தொழிலாளர்கள் சென்றுவிடுவதால் பெரும் பிரச்னையாக உள்ளது. குறிப்பாக மழையினால் தோட்டங்கள், காடுகள் உள்ளிட்ட இடங்களில் அதிகமான வேலை கிடைக்கிறது. ஏல தோட்டங்களிலும் வேலைக்கு ஆட்கள் தேவை என்ற அளவில் விவசாய மராமத்து பணிகளுக்கு கூலிதொழிலாளர்களை தேடுவதே பிரச்னையாக உருவெடுத்துள்ளது’ என்றனர். வெயிலின் தாக்கம் இருக்கும்.

Tags : Kambam valley ,
× RELATED கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் அவரை விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை