×

மாநில வாலிபால் போட்டிக்கு கம்பம் சிபியூ பள்ளி மாணவர்கள் தகுதி

கம்பம், நவ. 7: 14 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான வாலிபால் போட்டியில் கம்பம் சிபியூ மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.தேனி வட்டார அளவிலான 14 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான வாலிபால் போட்டி நேற்று முன்தினம் கம்பம் சிபியூ மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. போட்டியில் மொத்தம் எட்டு பள்ளிகளிலிருந்து அணிகள் கலந்து கொண்டன. இதில் இறுதிப்போட்டியில் கம்பம் சிபியூ மேல்நிலைப் பள்ளி மாணவர்களும், ராயப்பன்பட்டி எஸ்யூஎம் மேல்நிலைப் பள்ளி மாணவர்களும் மோதினார். இதில் கம்பம் சிபியு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டியில் விளையாட தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் திருமலை சந்திரசேகரன், தலைமை ஆசிரியர் அபுதாஹிர், உடற்கல்வி இயக்குனர் ஆசிக், உடற்கல்வி ஆசிரியர் ராதாகிருஷ்ணன் மற்றும் பள்ளியின் இருபால் ஆசிரியர்களும், அலுவலக ஊழியர்களும், மாணவர்களும் பாராட்டினர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தாளாளர் பரிசுகள் வழங்கினார்.

Tags : Kambu Sibiu School ,State Volleyball Tournament ,
× RELATED விபத்தில் உயிரிழந்த மாணவ, மாணவிகளுக்கு அஞ்சலி