அரசு பள்ளியில் வினாடி-வினா போட்டி

தேவகோட்டை, நவ.7: தேவகோட்டை அருகே உள்ள புளியால் அரசு உயர்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் மன்றத்தின் சார்பாக வினாடி-வினா போட்டி நடந்தது. தலைமையாசிரியை தனலெட்சுமி தலைமை வகித்தார். சமூக அறிவியல் மன்றத்தின் செயலர் ஜோசப் இருதயராஜ் முன்னிலை வகித்தார். பொது அறிவு, குடிமையியல், பொருளாதாரம் மற்றும் வரலாறு ஆகிய பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டன. கணக்காளராக ஆசிரியர் ராஜேந்திரன் செயல்பட்டார். மாணவி சிவரஞ்சனி, மாணவர் ரகுபதி முதலிடம் பிடித்தனர். மாணவிகள் ரேகா, காளீஸ்வரி இரண்டாம் இடம் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சமூக அறிவியல் மன்றம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.

Related Stories:

>