×

விவசாயிகளுக்கு அடிப்படை பயிற்சி

சிவகங்கை, நவ.7: சிவகங்கை அருகே சாமியார்பட்டி கிராமத்தில் விவசாயிகளுக்கான கிராம அளவிலான அடிப்படை பயிற்சி நடந்தது. வேளாண்மை துணை இயக்குநர்(உபநி) சசிகலா தலைமை வகித்தார். விவசாயிகள் நடவு செய்துள்ள நெல் பயிருக்குத் தேவையான உரமிடுதல், பயிர் பாதுகாப்பு முறைகள், உயிர் உர பயன்பாடுகள் குறித்து தொழில்நுட்பச் செய்திகள் மற்றும் செயல்விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டன. வயல்களில் பயிர் எண்ணிக்கை பராமரித்தல், உயிர் உரங்களான அசோஸ் பைரில்லம், பாஸ்போபேக்டீரியா பயன்படுத்தி விதை நேர்த்தி செய்வதால் ஏற்படும் பயன் குறித்த செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. உயிர் உரமான அசோஸ்பைரில்லம் பயன்படுத்தி வளிமண்டலத்தில் உள்ள தழைச்சத்தினை பயிர்களுக்கு எளிய முறையில் கிடைக்கப் பெற செய்வதால் ரசாயன உரங்கள் பயன்பாட்டினை குறைக்கலாம் எனவும், பாஸ்போபேக்டீரியாவை பயன்படுத்துவதால் மண்ணில் பயன்படாத நிலையில் உள்ள மணிச்சத்தை பயிருக்கு கிடைக்கக்கூடிய நிலைக்கு மாற்றி தாவர வேர் வளர்ச்சிக்கு உதவுவதன் பங்கு குறித்து கூறப்பட்டது. இப்பயிற்சியில் வேளாண்மை அலுவலர் பரமேஸ்வரன், உதவி வேளாண்மை அலுவலர் உதயகுமார், வட்டார தொழில்நுட்ப மேலாளர் அன்பழகன், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சதீஷ், நந்தினி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED போலீசுக்கு யோகா பயிற்சி