×

பயன்பாட்டிற்கு வருமா? சத்துணவு ஊழியர் சங்க கூட்டம்

சிவகங்கை, நவ.7: சிவகங்கையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்டத்தலைவர் கண்ணுச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சீமைச்சாமி முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் மலர்விழி கோரிக்கையை விளக்கி பேசினார். காலமுறை ஊதியம், குடும்ப ஓய்வூதியம், உணவு மானியம் உயர்த்தல், காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நவ.12ல் மாவட்ட தலைநகரங்களில் நடக்க உள்ள கவன ஈர்ப்பு பேரணி, நவ.18ல் சென்னையில் நடக்க உள்ள கோட்டை நோக்கிய பேரணியில் ஏராளமானோர் கலந்துகொள்வது,  நவ.26ல் சிவகங்கையில் மறியல் போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிர்வாகிகள் பழனியம்மாள், முத்துக்குமார், ரெத்தினம், பூந்தேவி, கோமதி, பாலசுப்பிரமணியன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். மாவட்ட பொருளாளர் பானுமதி நன்றி கூறினார்.

Tags : Nutrition Employees Union Meeting ,
× RELATED மண்புழு உரங்களை பயன்படுத்தினால் நிலத்தின் வளங்களை அதிகப்படுத்தலாம்