×

அரசு பஸ் மோதி முதியவர் பலி

மானாமதுரை, நவ.7: அரசு பஸ் மோதி முதியவர் உயிரிழந்தார். மானாமதுரை புதுபஸ்ஸ்டாண்டில் இருந்து கமுதி செல்லும் பஸ் வெளியே கிளம்பியது. அப்போது பஸ்ஸ்டாண்டு நுழைவுவாயிலை கடந்து சென்ற முதியவர் மீது மோதியது. இதில் அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இறந்த முதியவர் சட்டை பையில் எந்த விலாசமோ, ஆவணங்களோ இல்லாத நிலையில் இறந்தவர் குறித்து விபரம் தெரியவில்லை. இது குறித்து விஏஒ காளிமுத்து கொடுத்த புகாரின்பேரில் மானாமதுரை போலீசார் அரசு பஸ் டிரைவர் பழையனூர் தங்கச்சாமி மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED தேர்தல் விழிப்புணர்வு கருத்தரங்கம்