கழுகுமலை கோயில் கந்தசஷ்டி விழாவில் கழுகாசலமூர்த்தி, தெய்வானை திருக்கல்யாணம்

கழுகுமலை, நவ.7: கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் சுவாமி. தெய்வானை திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடந்தது. தென்பழநி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த 28ம்தேதி தொடங்கியது. 1ம்தேதி தாரகாசூரன் சம்ஹாரமும், 2ம்தேதி சூரசம்ஹாரமும் நடந்தது. நேற்று முன்தினம் கழுகாசலமூர்த்தி, தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 5.30மணிக்கு நடைதிறக்கப்பட்டு கழுகாசலமூர்த்திக்கு சிறப்பு அபிசேகம், ஆராதனை நடந்தது. மாலை 7.30 மணிக்கு கழுகாசலமூர்த்தி, வள்ளி, தெய்வானை பட்டாடைகள் உடுத்தி மேளதாளத்துடன் வசந்த மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இரவு 8 மணியளவில் கழுகாசலமூர்த்தி, தெய்வானைக்கு திருக்கல்யாண வைபோகம் வெகு விமரிசையாக நடந்தது.

இதையொட்டி பக்தர்களுக்கு குங்குமம், மஞ்சள் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன. கோயில் செயல் அலுவலர் கார்த்தீஸ்வரன் தலைமை வகித்தார். கட்டளைதாரர் கண்ணாயிரம், சரஸ்வதி, திமுக மாநில விவசாய தொழிலாளர் அணிச் செயலாளர் சுப்பிரமணியன், முன்னாள் பேரூராட்சி தலைவி அருணா சுப்பிரமணியன், தொழிலதிபர் மாரியப்பன் செட்டியார், ஆர்.எம்.ஆர்.ரமேஷ், ஒப்பந்ததாரர் காளிராஜ், பிரதோஷ குழு தலைவர் முருகன், பவுர்ணமி கிரிவல குழு தலைவர் மாரியப்பன், இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, தலைமை எழுத்தர் செண்பகராஜ், பரமசிவன், சீர்பாத தாங்கிகள் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் மன்னர்குடி பழனிசாமி நாடார்- சின்னத்தாயம்மாள் அன்னதானம் வழங்கினர்.
10ம் திருநாளான நேற்று வள்ளி, தெய்வானையுடன் சுவாமி பெரிய பல்லக்கிலும், சோமாஸ்கந்தர் சிறிய பல்லக்கிலும் திருவீதியுலாவாக பட்டினப்பிரவேஷம் சென்றனர். 11ம் திருநாளான இன்று மாலை 6.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவுடன் கந்தசஷ்டிவிழா நிறைவு பெறுகிறது.

Tags : festival ,Kandasashti ,
× RELATED பட்டிவீரன்பட்டி முத்துலாபுரத்தில்...