×

தொடர் மழையால் பல்லாங்குழியான பன்னம்பாறை சாலை வாகன ஓட்டிகள் பாதிப்பு

சாத்தான்குளம், நவ. 7: சாத்தான்குளம்  அருகேயுள்ள பன்னம்பாறை  கிராமம் திருச்செந்தூர் செல்லும் பிரதான சாலையில் உள்ளது. இவ்வழியாக நங்கைமொழி, மெஞ்ஞானபுரம், பரமன்குறிச்சி, திருச்செந்தூர், தூத்துக்குடி பகுதிகள் செல்லும் அரசு பேருந்துகள் மற்றும் இதர வாகனங்கள் ஏராளமான சென்று வருகின்றன. இரு சக்கர வாகன ஓட்டிகள் ஏராளமானோர் சென்று வருகின்றன. தொடர்ந்து பெய்த மழையால் பன்னம்பாறையில் பேருந்து நிறுத்தப்பகுதியில் இருந்து வீரவநல்லூர் கிராம விலக்கு வரை சாலையில் அதிகமான பள்ளங்கள் விழுந்து காணப்படுகிறது. இப்பகுதிக்கு நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட தொலை தூர பகுதி மக்கள் அதிகமாக வந்து செல்வதால் சாலையில் உள்ள பள்ளங்கள் தெரியாமல் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. சிறிது மழை பெய்தாலும் சாலையில் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது.

இதனால் அரசு பேருந்து உள்ளிட்ட வேன், கார்கள் இந்த பள்ளத்தில் சிக்கி  சிரமமடைகின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயம் அடையும் சூழலும் அடிக்கடி ஏற்படுகிறது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை சாலையை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வில்லையென பொதுமக்கள், வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர். ஆதலால் இந்த சாலையில் பெரும் விபத்து நிகழும் முன் அதிகாரிகள் பார்வையிட்டு  சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road motorists ,
× RELATED புதுச்சத்திரம்-திருநின்றவூர் இடையே...