×

விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி யூரியா வழங்க வேண்டும் கோவில்பட்டி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

கோவில்பட்டி, நவ.7: தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி யூரியா வழங்கக்கோரி கோவில்பட்டியில் நடந்த தமிழ் விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோவில்பட்டியில் தமிழ் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் நாராயணசாமி தலைமையில் நடந்தது. மாவட்ட தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் சாமியா வரவேற்றார். கூட்டத்தில் கடந்த 2017-18ம் ஆண்டிற்கான விடுபட்ட பயிர் காப்பீடு தொகையை வழங்கவேண்டும் என்றும்,

2018-19ம் ஆண்டு மக்காச்சோளம் உள்ளிட்ட பிற பயிர்களுக்கு காப்பீடு செய்தும் இதுவரையில் விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்காமல் காலம் தாழ்த்தி வரும் சென்னையில் உள்ள நியூஇந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி அலுவலகத்தை வரும் 13ம்தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என்றும், தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், விவசாயிகளுக்கு தேவையான யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், வேளாண்மை இணை இயக்குநர் உடனடியாக போர்க்கால அடிப்படையில் யூரியா வழங்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க நிர்வாகிகள் வேலுச்சாமி, செந்தில்குமார், சுப்புராஜ், பாப்பா மற்றும் தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.

Tags :
× RELATED சாயர்புரத்தில் திமுக பூத் கமிட்டி கூட்டம்