×

முறுக்கு, இடியப்பமாவு கம்பெனிக்கு ரேஷன் அரசி நூதன முறையில் கடத்தல்

காரைக்குடி, நவ.7: காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் இலவச பச்சரிசி கடத்தப்பட்டு முறுக்கு மற்றும் இடியாப்ப மாவு கம்பெனிகளுக்கு கடத்தப்படுவதாகவும், புழுங்கல் அரிசி பாக்கெட் மாவு அரைக்கவும், கோழி தீவனத்திற்கும் அனுப்பப்படுவதாக புகார் எழுந்துள்ளது. காரைக்குடி தாலுக்காவில் 81 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேசன் கார்டுகள் உள்ளன. 100 முழுநேர கடைகளும், 28 பகுதிநேர கடைகளும் செயல்படுகின்றன. சீனி, கோதுமை, பாமாயில் போன்ற பொருட்கள் குறைந்த விலையில் அரசு விற்பனை செய்துவருகிறது. அரிசியை பொறுத்தவரை ஒரு நபருக்கு அதிக பட்சமாக  புழுங்கல் அரிசி 15 கிலோவும், பச்சரிசியை பொறுத்தவரை 5 கிலோ என 20 கிலோ அரிசி இலவசமாகவும் அரசு வழங்குகிறது. புழுங்கல் அரிசியை பொறுத்தவரை  கிராமப்பகுதி மக்கள் அதிக அளவில் விரும்பி வாங்குகின்றனர். நகர் பகுதியில் ஒரு சிலரே வாங்குகின்றனர். இத்தகைய அரிசி பாலீஸ் போடப்பட்டு குறைந்த விலையில் விற்பனைக்கும், பாக்கெட் மாவுக்கும் பயன்படுத்தப்படுகிறது. பச்சரிசியை பொறுத்தவரை பெரும்பாலும் மக்கள் வாங்குவது கிடையாது. ரேசன் அரிசியை நேரடியாக கடத்தினால் அதிகாரிகளிடம் பிடிப்பட்டு விடுவதால் சமீபகாலமாக நூதன முறையை கையாண்டு வருகின்றனர்.

யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க இவர்கள் கிரமப்புறங்களில் அதிகாலை நேரங்களில் சிறிய வாகனங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வதுபோல வீடுவீடாக அரிசியை வாங்குகின்றனர். தவிர மக்கள் கண்காணிப்பு இல்லாத நேரங்களில் ரேசன் கடைகளில்  இது போன்ற  கடத்தல் அதிக அளவில் நடைபெறுகிறது.  ரேசன் அரிசி வாங்குபவர்களிடம் கிலோ ரூ.5க்கு வாங்கி முறுக்கு கம் பெனிகளுக்கு கிலோ 20 வரை விற்பனை செய்கின்றனர். புழுங்கல் அரிசியை பொறுத்தவரை பாக்கெட் மாவு அரைக்கவும், கோழி தீவனத்திற்கும் அனுப்பப்படுகிறது. இதனை தடுக்க வேண்டிய சம்மந்தப்பட்ட துறைக்கு சம்திங் செல்வதால் பெயர்அளவில் ரைடு நடத்தி தங்களது கடமையை முடித்துக் கொள்கின்றனர் என மக்கள் புகார் கூறுகின்றனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ரேசன் அரிசியை ரூ.5க்கு பொதுமக்களிடம் வாங்கி,  இதற்கு என உள்ள புரோக்கர்களிடம் விற்பனை செய்யப்படும். இதனை அவர்கள் முறுக்கு, இடியப்ப மாவு கம்பெனிகளுக்கும், பாக்கெட் மாவு கம்பெனிகளுக்கும் விற்பனை செய்வார்கள். தவிர  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகளிடம் கோழி தீவனத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவே ரேசன் அரிசி கடத்தலை அதிகாரிகள் தடுக்க வேண்டும்.

Tags : ration queen ,company ,
× RELATED ஆவின் பால் பாக்கெட்டுகளில்...