×

ராமநாதபுரத்தில் மத்திய அரசை கண்டித்து காங். கண்டன ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம், நவ. 7:  ராமநாதபுரத்தில் மத்திய அரசின் மோசமான  பொருளாதார கொள்கைகளை கண்டித்து காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ராமநாதபுரம் அரண்மனை முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் தலைமை வகித்தார். முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா எஸ்.பாண்டி முன்னிலை வகித்தார். தமிழகம், புதுவை மாநில மேலிட பார்வையாளர் சஞ்சய் தத், செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் ஆகியோர் மத்திய அரசை கண்டித்து பேசினர். இதில் மாவட்ட பொருளாளர் பாரிராஜன், அகில இந்திய காங். கமிட்டி உறுப்பினர்கள் வேலுச்சாமி, மாவட்ட பொதுச்செயலாளர் செந்தாமரை கண்ணன், மணிகண்டன், மாவட்ட மகளிரணி தலைவர் பெமிளா, இலக்கிய அணித் தலைவர் முருகேசன், எஸ்டி பிரிவு தலைவர் ராஜசேகரன், மாவட்ட துணை தலைவர் சோபா.ரெங்கநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Congress ,government ,
× RELATED காங்கிரஸ் நிர்வாகி திடீர் நீக்கம்