பேச்சு போட்டியில் கீழக்கரை பள்ளி மாணவர் முதலிடம்

தொண்டி, நவ.7:  தொண்டி அல்கிலால் மெட்ரிக் பள்ளி, அமிர்சுல்தான் அகாடமிக் பள்ளி மற்றும் முனவ்ரா நடுநிலைப்பள்ளி இணைந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கான 4ம் அண்டு பேச்சு போட்டி நடத்தினர். முஸ்லீம் கல்வி சங்கம் தலைவர் கமால் பாட்சா தலைமை வகித்தார். அல்கிலால் பள்ளி தாளாலர் அஹமது இபுராஹிம், சலாமத் ஹீஸைன் முன்னிலை வகித்தனர். செயலாளர் அப்துல் ரவூப் வரவேற்றார். ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து கீழக்கரை, ஆர்.எஸ்.மங்கலம் உள்ளிட்ட பல்வேறு பள்ளியிலிருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். ஆங்கில பேச்சு போட்டியில்  முதல் பரிசை கீழக்கரை இஸலாமிக் மெட்ரிக் பள்ளி மாணவி ஆய்சத்ருக்சானா, இரண்டாம் பரிசு தொண்டி அல்கிலால் பள்ளி ஆயிசா பர்வின், முன்றாம் பரிசு தேவிபட்டினம் ராம் பிரகாஷ், நான்காம் பரிசை காடாங்குடி அரசு பள்ளி மாணவி துர்கா பெற்றனர். தமிழுக்கான போட்டியில் ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவன் முகமது ஆதில், இரண்டாம் பரிசு ராமநாதபுரம் செய்யது அம்மாள் பள்ளி பாத்திமா சாலிஹா, முனறாம் பரிசு புலியூர் பாலாஜி, நான்காம் பரிசை அமீர் சுல்தான் பள்ளி முகமது அப்துல் இசாக் பெற்றனர்  மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் பரிசை வென்ற் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. முனைவர் சுந்தரவள்ளி, நம்புதாளை அல்கிலால் பள்ளி முதல்வர் ரஷியா பானு உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>