×

தொட்டியத்தில் கலெக்டர் ஆய்வு

திருச்சி, நவ.7: தொட்டியம் தாலுகா, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் கலெக்டர் சிவராசு நேற்று ஆய்வு மேற்கொண்டார்.தொட்டியம் தாலுகா அலுவலகத்தில் பதிவறையில் உள்ள ஆவணங்கள் சரியான முறையில் பராமரிக்கப்படுகிறதா என்று அலுவலகத்தில் உள்ள பதிவேடுகள் மற்றும் பணியாளர்களின் வருகை பதிவேடுகளை ஆய்வு செய்தார். தொட்டியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆவணங்களை ஆய்வு செய்து, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், திடக்கழிவு சேகரிப்பதற்கு பேட்டரியால் இயங்கும் வாகனத்தின் சாவியை துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கினார். பேரூராட்சி அலுவலகத்தில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை பார்வையிட்டார். முதல்வர் பசுமை வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளையும், தொகுப்பு வீடுகளையும் பார்வையிட்டார். பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.


Tags : Collector ,
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...