×

மண்ணச்சநல்லூர் அருகே மான்பிடிமங்கலத்தில் காவு வாங்க காத்திருக்கும் ஆபத்தான ‘மெகா’ மரம் அச்சத்தில் வாகனஓட்டிகள்

மண்ணச்சநல்லூர், நவ.7: மண்ணச்சநல்லூர் அருகே காவு வாங்க காத்திருக்கும் ஆபத்தான மெகா மரத்தால் அவ்வழியாக வாகனஓட்டிகள் அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர்.மண்ணச்சநல்லூர் அருகே திருச்சி-நாமக்கல் நெடுஞ்சாலையில் மான்பிடிமங்கலம் கொள்ளிடக் கரையோரம் பட்டுப்போன மெகா மரம் உள்ளது. திருச்சி, பெங்களூரு, சேலம், நாமக்கல். தொட்டியம், முசிறி ஆகிய பகுதிகளுக்கு இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும். மேலும் கனரக வாகனம், பஸ், கார், வேன் என்று பல்வேறு வாகனங்களும் அதிகளவில் சென்று வருகின்றன. இது தவிர இந்த சாலை மிக ஆபத்தான சாலையாக உள்ளன. மலை பகுதியில் உள்ளது போல் கொண்டை ஊசிகள் போல பல வளைவுகள் உள்ளன. இதனால் எந்த நேரமும் போக்குவரத்து இருந்து கொண்டுதான் இருக்கும். இந்த சாலையில் விபத்தில் பல உயிர்களை பறித்த இடம். கடந்த சில மாதங்களுக்கு முன் வேளங்கண்ணிக்கு பெங்களூருவை சேர்ந்த டாக்டர்கள், ஆசிரியர்கள் ஒரே விபத்தில் 3 உயிர்களை காவு வாங்கிய இடம். இதனால் அவ்வழியாக பாதையை கடந்து செல்லும் வாகனஓட்டிகள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே பட்டுப்போன மரம் எந்த நேரத்திலும் விழும் ஆபாய நிலையில் உள்ளதால் இதனை கருத்தில் கொண்டு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இந்த மரத்தை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று வாகனஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags : Motorists ,Manpidimangalam ,Mannachanallur ,
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...