×

மழை கால இடர்பாடுகளை எதிர்கொள்வது எப்படி? பாதுகாப்பு முன்னெச்சரிக்கை பற்றி மின்வாரியம் விளக்கம்

திருச்சி, நவ.7: பருவமழை தொடங்கியதை அடுத்து புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பொருள் சேதம் ஏற்படுவதோடு, மனித மற்றும் விலங்கினங்கள் உயிரிழிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இயற்கை இடர்பாடுகளை எதரி–்கொள்வது குறித்து அன்றாட நடைமுறை வாழ்க்கையில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மின்வாரியம் வழங்கி உள்ள வழிமுறைகள் வருமாறு:மின் ஒயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்ற ஒப்பந்தக்கார் மட்டும் செய்யவும். ஐஎஸ்ஐ முத்திரை மின்சாதனங்களை பயன்படுத்த வேண்டும். மின்சார பிளக்குகளை பொருத்தும்போதும், எடுக்கும் போதும் சுவிட்சை ஆப் செய்ய வேண்டும். பிரிட்ஜ், கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக மின்சாதனங்களுக்கு நில இணைப்புடன் கூடிய மூன்று பின் சாக்கெட் உள்ள பிளக்குகள் மூலம் மட்டுமே மின் இணைப்பு தரவேண்டும். 30 எம்ஏ ஈஎல்சிபி அல்லது ஆர்சிசிபி (மின் கசிவு தடுப்பான்) பயனீட்டாளரின் வீடுகளில் உள்ள மெயின் ஸ்விட்ச் போர்டில் பொருத்தி மின்கசிவினால் ஏற்படும் விபத்தை தவிர்த்திடுவீர்.

உடைந்த சுவிட்ச், பிளக்குகளை உடனே மாற்ற வேண்டும். பழுதான மின்சாதனங்களை பயன்படுத்தாதீர். கேபிள் டிவி ஒயர்களை மேல்நிலை கம்பிகளுக்கு அருகில் கொண்டு செல்லாதீர். ஒவ்வாரு வீட்டுக்கும் சரியான நில இணைப்பு போட்டு, குழந்தைகள், விலங்குகள் தொடாத வகையில் பராமரிக்க வேண்டும்.சுவிட்ச், பிளக்குகளை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைக்க வேண்டும். ஐந்தாண்டுக்கு ஒருமுறை வீட்டு ஒயர்களை சோதனை செய்யவும். மின்கம்பத்துக்கான ஸ்டே கம்பி மீது அல்லது மின் கம்பி மீது கொடி கயிறு கட்டி துணி காய வைக்கக்கூடாது.குளியலறை, கழிப்பறையில் ஈரமான இடங்களில் சுவிட்ச் பொருத்தாதீர். மின் மாற்றிகள் துணை மின் நிலைய வேலி அருகே சிறுநீர் கழிக்காதீர். மின கம்பங்களில் மாடு உள்ளிட்ட கால்நடைகளை கட்டாதீர். அறுந்து விழுந்த மின்கம்பம் குறித்து உடனடியாக மின்வாரியத்துக்கு தெரியப்படுத்தவும். மின்கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்ட மின்வாரிய அலுவலர்களை அணுகவும். மின்சாரத்தால் ஏற்படும் தீயை தண்ணீர் கொண்டு அணைக்கக்கூடாது. உலர்ந்த மணல், கம்பளி போர்வை, உலர்ந்த ரசாயன பொடி கரியமில வாயு ஆகிய தீயணைப்பான்களை பயன்படுத்தவும். இடி, மின்னலின் போது வெட்ட வெளியில் நிற்காதீர். கான்கிரீட் கூரையிலான பெரிய கட்டிடம், வீடு போன்ற கட்டிடங்களிலோ பஸ், கார் வேன் ஆகிய வாகனங்களில் தஞ்சமடையவும். குடிசை வீடு, மரத்தடி, பஸ் நிறுத்தம் கீழ் தஞ்சம் புகாதீர். இடி, மின்னலின்போது மின்சாதனங்களை பயன்படுத்ததாதீர். திறந்தநிலையில் உள்ள ஜன்னல், கதவு அருகில் இருக்காதீர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ