×

அரசு மருத்துவமனையில் மாணவர்கள் தூய்மை பணி

 சாயல்குடி, நவ.7:  முதுகுளத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தை அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை படுத்தி சீரமைத்தனர். முதுகுளத்தூர் தாலுகா அரசு மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட கிராமமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். தினந்தோறும் 300க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள், 20க்கும் அதிகமான உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது மழைக்காலம் என்பதால் மருத்துவமனை வளாகத்தில் புல், செடிகள் வளர்ந்து சுகாதாரக்கேடு நிலவி வந்தது. இந்நிலையில் முதுகுளத்தூர் என்.எஸ்.எஸ். திட்டம், என்.சி.சி திட்ட மாணவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் சார்பில் மருத்துவமனை வளாகத்தை துப்புரவு செய்து, சீரமைக்கும் பணி நடந்தது. நிகழ்ச்சிக்கு என்எஸ்எஸ் திட்ட அலுவலர் மங்களநாதன் தலைமை வகித்தார். திட்ட அலுவலர் அருள்தாஸ் முன்னிலை வகித்தார். மருத்துவ அலுவலர் செந்தில் ராஜ்குமார் வரவேற்றார். மருத்துவமனை வளாகம், தண்ணீர் தேங்கும் இடம், சுற்றுபுறத்தில் செடி, புல், சீமை கருவேல மரம், குப்பைகள் அகற்றப்பட்டு, கிரிமி நாசினி தெளிக்கப்பட்டது. செவிலியர் இளங்கோ நன்றி கூறினார்.

Tags : government hospital ,
× RELATED அரசு மருத்துவமனையில் இருந்து 50,000 பேர் குணமடைந்தனர்