×

அடிப்படை வசதியின்றி மண்டபம் முகாம் ரயில் நிலையம்: பயணிகள் கடும் அவதி

மண்டபம், நவ.7:   அடிப்படை வசதியின்றி மண்டபம் முகாம் ரயில் நிலையம் உள்ளதால், பயணிகள் அவதிப்படுகின்றனர். மண்டபம் முகாமை சுற்றி ஏராளமான அரசு அலுவலகம், இலங்கை தமிழர் முகாம் உள்ளது. இதில் வேலை செய்யும் அதிகாரிகள் மற்றும் மண்டபம் முகாம் பகுதியை சேர்ந்த  ஏராளமான பயணிகள் தினமும் மண்டபம் முகாம் ரயில் நிலையத்திலிருந்து பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் மண்டபம் ரயில் நிலையம் பராமரிப்பு இல்லாமல் முள் செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. மேலும் அடிப்படை வசதியான குடிநீர் குழாய்கள் அனைத்தும் சேதமடைந்து காணப்படுவதால் குடிநீர் கிடைக்காமல் பயணிகள் அவதியடைகின்றனர். மேலும் இரவு நேரங்களிள் போதிய மின் விளக்குகள் இல்லாததால் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் இலவச பாராகவும் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் பயணம் செய்யும் பயணிகளும் அச்சமடைகின்றனர். எனவே உடன் ரயில்வே நிர்வாகம் மண்டபம் முகாம் ரயில் நிலையத்தை சீரமைத்து இரவில் ரயில் நிலையங்களில் சுற்றி திரியும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மண்டபம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மண்டபம் முகாம் பகுதியை சேர்ந்தவர்கள் கூறும்போது, மண்டபம் முகாம் ரயில் நிலையம் பழமை வாய்ந்தது. தற்போது இந்த ரயில் நிலையம் பராமரிப்பு இல்லாமல் சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது. மேலும் இரவு நேரங்க ளில் மது குடிக்கும் பாராக வும் உள்ளது. பயணிகள்
மது அருந்துபவர்களை தட்டி கேட்டால் குடி போதையில் தகராறில் ஈடுபடுகின்றனர். இதனால் ரயில் பயணம் செய்ய பயணிகள் அஞ்சும் நிலையுள்ளது.

Tags : Mandapam ,camp ,
× RELATED பொல்லானுக்கு மணிமண்டபம் கட்ட கனிமொழி எம்.பி.யிடம் கோரிக்கை