×

மக்களவை தேர்தலில் ‘ஜிபிஎஸ்’ முறையை கையாண்டதற்கு நெல்லை கலெக்டருக்கு தேசிய விருது

நெல்லை, நவ. 7: மக்களவை தேர்தலில் சிறப்பாக ஜிபிஎஸ் முறையை கையாண்டதற்காக நெல்லை கலெக்டருக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.
அரசு துறையில் மின்னணு மாற்றம் என்ற அடிப்படையில் கடந்த 2019 மக்களவை தேர்தலில் நெல்லை மாவட்டத்தில் உள்ள 2979 வாக்குச்சாவடி மையங்களிலும் புவி சார் அமைப்பு மூலமாக  (GIS based poll monitoring  system) கண்காணித்து சிறப்பான முறையில் தேர்தலை நடத்தியதற்காக மாவட்ட அளவிலான மின்னணு மாற்றம் விருது தேசிய அளவில் வழங்கப்பட்டது.

இதற்காக அகில இந்திய அளவில் பெறப்பட்ட 600 விண்ணப்பங்களில் 30 விண்ணப்பங்கள் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டன. அகில இந்திய அளவில் மாவட்ட அளவில் 5 விருதுகளில் நெல்லை மாவட்டமும் ஒன்றாகும். தமிழகத்தில் நெல்லை மாவட்டத்திற்கு மட்டுமே இந்த விருது கிடைத்தது. டில்லியில் நேற்று நடந்த மின்னணு மாற்றம் மாநாட்டில் ‘டிஜிட்டல் ட்ரான்ஃபர்மேசன் விருது-2019’ என்ற விருதை  கவர்னன்ஸ் நவ் என்ற தேசிய குழு நெல்லை கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷிற்கு வழங்கியது. நெல்லை மாவட்ட தேசிய தகவலியல் மைய அலுவலர் தேவராஜ், உதவி அலுவலர் ஆறுமுக நயினார் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Paddy Collector ,election ,Lok Sabha ,
× RELATED அரசு ஆம்புலன்ஸ்களில் ஜிபிஎஸ்...