×

கழிவுநீரால் மீன்களுக்கு ஆபத்து

மண்டபம், நவ.7:  ராமேஸ்வரம் முதல் தூத்துக்குடி வரை மன்னார் வளைகுடா கடலில் 21 தீவுகள் உள்ளன. இந்த தீவுகளை சுற்றி 450 வகையான அரிய உயிரினங்கள், பவளப் பாறைகள் உள்ளன. இந்நிலையில் ராமேஸ்வரம் முதல் மண்டபம் வரை கடலோரத்தில் மீன் கழிவுகளை கொட்டி மாசுபடுத்துகின்றனர். மேலும் நண்டு கணவாய் மீன்களை வேக வைத்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் கழிவுநீரை குழாய் மூலம் கடலில் கலக்கின்றனர்.   
கடலியல் ஆய்வாளர் ஒருவர் கூறியதாவது, ராமேஸ்வரம் முதல் மண்டபம் வரை கடலோரத்தில் ஏராளமான மீன் ஏற்றுமதி நிறுவனங்கள் அனுமதியின்றி செயல்படுகின்றன. இவற்றில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை கடலில் கலக்க விடுக்கின்றனர். இதனால் கடல் வளம் பாதிக்கப்படுவதுடன் மட்டும் அல்லாமல் கடல் மீன்கள் மூச்சு திணறி உயிரிழக்கும் நிலையுள்ளது. மேலும் கழிவுநீர் கடலோரத்தில் படிந்து இருப்பதால் மீன்கள் வாழ முடியாத சூழல் உருவாகும் நிலையுள்ளது. மேலும் இந்நிலை நீடித்தால் மன்னார் வளைகுடா மற்றும் பாக்நீரிணை கடலில் 25 சதவீதம் மீன்கள் இனங்கள் அழியும் அபாயம் உள்ளது என்றார்.

Tags :
× RELATED பழவேற்காடு மீன் சந்தையில் சமூக...