×

சாயல்குடியில் மும்முனை சந்திப்பில் சேதமடைந்த சாலை

சாயல்குடி, நவ. 7:  சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளதால் விபத்துகள் நடந்து வருகிறது. இதனால் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கிழக்கு கடற்கரை சாலையில் சாயல்குடி அமைந்துள்ளதால், போக்குவரத்து மிகுந்த நகராக விளங்கி வருகிறது. இச்சாலையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகளும், ஆன்மீக யாத்தீரிகர்களும் ராமேஸ்வரம், திருப்புல்லானி, தேவிபட்டிணம், திருஉத்திரகோசமங்கை, ஏர்வாடி போன்ற ஆன்மீக ஸ்தலங்க ளுக்கு வந்து செல்கின்றனர். இதுபோன்று திருச்செந்தூர், கன்னியாகுமரி, குற்றாலம், சபரிமலை செல்வதற்கு ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வந்து செல்கின்றனர்.

மேலும் வாலிநோக்கம் அரசு உப்பளம், ராமேஸ்வரம், மண்டபம் மற்றும் சாயல்குடி கடற்கரை பகுதிகளிலிருந்து மீன்களும், கடலாடி பகுதியிலிருந்து மரக்கரிகள், பனை மர பொருட்கள் போன்ற பொருட்களை ஏற்றிக்கொண்டு வாகனங்கள் பிற மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் செல்கிறது. மேலும் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கமுதி அருகே உள்ள சோலார் மின் உற்பத்தி நிலையத்திற்கு தினமும் பொருட்களை ஏற்றிக்கொண்டு வாகனங்கள் வந்து செல்கின்றன.
இதனால் சாயல்குடி மும்முனை சந்திப்பான ராமேஸ்வரம், அருப்புக்கோட்டை, கன்னியாகுமரி சாலை சந்திப்பில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது இந்த இடத்தில் மழைக்கு சாலை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் வாகனங்கள் சிக்கி விபத்து ஏற்பட்டு வருவதாகவும், இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,Saiyalkudi junction ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...