×

சாம்பவர்வடகரையில் அங்கன்வாடி பள்ளி அருகே அபாய நிலையில் திறந்தவெளி கிணறு

சுரண்டை, நவ. 7: அங்கன்வாடி பள்ளி அருகே உள்ள  திறந்தவெளி தரைநிலை கிணற்றுக்கு மூடிபோட வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடையநல்லூர் தாலுகா, செங்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட சாம்பவர்வடகரை 1 வது வார்டில் மாஞ்சோலை தெருவில் அங்கன்வாடி பள்ளி உள்ளது. இதில் சுமார் 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். அங்கன்வாடி பள்ளி கட்டிடம் கட்டி 15 ஆண்டுகள் கூட ஆகவில்லை.ஆனால் கட்டிடம் அவ்வப்போது  பெயர்ந்து இடிந்து விழுவதால் குழந்தைகளின் நலன் கருதி அதே தெருவில் தனியாருக்கு சொந்தமான வீட்டில் அங்கன்வாடி பள்ளி செயல்படுகிறது.

இந்த இடத்திற்கு எதிரே மூடி போடாத திறந்தவெளியில் தரைநிலை கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் ஒரு சிலர் தவறி விழுந்துள்ளார். அங்கன்வாடி பள்ளி குழந்தைகள் மற்றும்  மாஞ்சோலை தெருவில் உள்ள குழந்தைகள் ஆபத்தை உணராமல் விளையாடுகின்றனர். கிணறு அருகில் இருந்து பீடி சுற்றும் பெண்கள் கிணற்றின் அருகே குழந்தைகள் செல்லாமல் பாதுகாத்து வருகின்றனர். எனவே, இதுவிஷயத்தில் மாவட்ட நிர்வாகம் தனிக்கவனம் செலுத்துவதோடு குழந்தைகள் நலன் கருதி தரைநிலை கிணறு மற்றும் அங்கன்வாடி பள்ளி கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தரைநிலை கிணற்றுக்கு தண்ணீர் எடுக்கும் அளவிற்கு இடம் விட்டு மூடி போடவேண்டும் அல்லது கிணற்றை சுற்றி 6 அடி உயரத்திற்கு சுவர் எழுப்ப வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் அங்கன்வாடி பள்ளி கட்டிடத்தை முழுவதுமாக இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.

Tags : school ,Anganwadi ,
× RELATED வத்திராயிருப்பு அரசு பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி