×

ஆசிரியர்களுக்கு அறிவியல் மாதிரி தயாரிப்பு பயிற்சி முகாம்

நெல்லை, நவ.7:  நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் 6, 7, 8ம் வகுப்புகளுக்கு பாடம் எடுக்கும் அரசு பள்ளிகளின் அறிவியல் ஆசிரியர்களுக்கு அறிவியல் வகுப்பறை மாதிரிகளை தயாரிக்கும் பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. மாவட்ட அறிவியல் மைய அலுவலர் எம்.குமார், பயிற்சி முகாமை துவக்கி வைத்தார். அறிவியல் அலுவலர் மாரிலெனின், பயிற்சி அளித்தார். பயிற்சியில் 39 ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்களுக்கு வெப்பம், மின்விளக்கு, மின் கருவிகள் மற்றும் இயற்பியல் பாடம் தொடர்பான மாதிரிகளை தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இன்று (நவ.7) பிற்பகல் நிறைவு விழா நடக்கிறது. இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி பங்கேற்று பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றுகள் வழங்க உள்ளார்.

Tags : Science Model Preparation Training Camp for Teachers ,
× RELATED ஸ்காட் பொறியியல் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி