×

அதிக அளவில் உரம் பயன்பாட்டால் ஒரேநாளில் கெட்டுப்போகும் காய்கறிகள் நெல்லையில் தடியங்காய் குப்பையில் வீச்சு

நெல்லை, நவ.7: நெல்லை காய்கறி சந்தையில் விற்காமல் கெட்டுப்போன தடியங்காய் குப்பையில் வீசப்பட்டது. அதிக உரம் போட்டு விளைவிப்பதால் விரைவில் காய்கறிகள் கெட்டுப்போவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். தற்போது மழை சீசனாக இருப்பதால் பல காய்கறிகளின் விளைச்சல் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. அதே நேரத்தில் காய்கறிகள் விரைவில் கெட்டும் போகிறது. நெல்லை டவுன் நயினார்குளம் மொத்த காய்கறி சந்தையில் விற்காமல் கெட்டுப்போன ஏராளமான தடியங்காய் நேற்று குப்பையில் வீசப்பட்டு கிடந்தது.

அதிக உரம் போட்டு விளைவிப்பதாலும், மழை நேரமாக இருப்பதாலும் எந்த காய்கறியும் நீண்ட நாட்கள் தாக்குப்பிடிப்பதில்லை. பறிக்கும் போது பளபளப்பாக இருக்கும் பல காய்கறிகள் ஒன்று அல்லது 2 நாட்களுக்குள் விற்கப்படாவிட்டால் அழுகிவிடுகின்றன. கேரட் கூட தாக்குபிடிப்பதில்லை. இதனால் அதிக நஷ்டம் ஏற்படுவதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே பல்லாரி விலை சற்று குறைந்துள்ளது. பல்லாரி மொத்த விற்பனையில் நேற்று கிலோ ரூ.50, ரூ.70 என 2 ரக விலைகளில் விற்பனையானது. அடுத்த 2 மாதங்களுக்கு காய்கறிகளின் விளைச்சலும் வரத்தும் மந்தமாகவே இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED டிராக்டர் கலப்பையை திருடிய வாலிபர் கைது