×

சுவாமிமலை ரயில் நிலையத்தில் டிக்கெட் இல்லையென கவுன்டரை பூட்டியதால் பயணிகள் அதிர்ச்சி

கும்பகோணம், நவ. 7: சுவாமிமலை ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுன்டரில் டிக்கெட் இல்லையென கவுன்டரை ஊழியர் பூட்டி சென்றதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலை ரயில் நிலையத்தில் நேற்று பயணிகள் ரயிலில் ஏற 35க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் ரயில் நிலையத்துக்கு வந்தனர். அப்போது டிக்கெட் கவுன்டரில் இருந்த ஊழியர், டிக்கெட் காலியாகி விட்டது என கூறி கவுன்டரை பூட்டி விட்டு சென்று விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் திணறினர். பின்னர் 7.30 மணிக்கு வந்த பயணிகள் ரயிலில் டிக்கெட் எடுக்காமலே தஞ்சைக்கு சென்றனர்.

இதுகுறித்து நிலைய மேலாளரிடம் கேட்டபோது, டிக்கெட் விநியோகிக்கும் தனியார் எஜென்ட் முதல்நாளே ரயில்வே நிர்வாகத்திடம் தேவையான டிக்கெட்டை வாங்கி விடுவர். ஆனால் நேற்று முன்தினம் வரவில்லையென தெரிகிறது. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.இதுகுறித்து ரயில்வே துறை அலுவலர்கள் கூறுகையில், ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுன்டர்களில் டிக்கெட் விற்கும் தனியார் ஏஜெண்டுகள், 15 நாட்களுக்கு ஒரு முறை தேவையான டிக்கெட்டை ரயில்வேயிடம் வாங்கி வைத்திருக்க வேண்டும். இதை தஞ்சை வணிக ஆய்வாளர் ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் அவர் சரிவர வருவதில்லை. இதனால் இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது. 35 பயணிகள் டிக்கெட் எடுக்காமலே சென்று விட்டனர் என்றனர்.


Tags : Travelers ,railway station ,Swamimalai ,
× RELATED சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளி மாநில பெண் மர்ம மரணம்..!!