×

திருவள்ளுவர் சிலை அவமதிப்பு தமிழக முதல்வர் கண்டித்திருக்க வேண்டும் திக தலைவர் வீரமணி பேட்டி

தஞ்சை, நவ. 7: தஞ்சை பிள்ளையார்பட்டியில் அவமதிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு திக தலைவர் வீரமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அமைதி பூங்காவாக திகழும் தமிழகத்தை தேவையற்ற கலவர பூமியாக மாற்ற வேண்டும். அதன்மூலமாக வருகிற உள்ளாட்சி தேர்தலில் எதிர்கட்சிகள் மீது பழிசுமத்தி அவர்களை சிறை வைக்க வேண்டும். அதன்பிறகு எளிதில் தேர்தலை நடத்தி விடலாம் என தப்பு கணக்கு போடுகின்றனர்.

ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது அடக்கத்தோடு அமைதியை காக்க வேண்டியவர்கள் அமைதியை குலைப்பதற்கு துணை போகிறார்கள். இப்படிப்பட்ட சம்பவம் நடந்த பிறகு பாஜ, ஆர்எஸ்எஸ் தலைமை இதை கண்டித்திருக்க வேண்டும். தமிழக முதல்வர் இதை கண்டித்திருக்க வேண்டும்.வாய்மூடி மவுனியாக இருக்க கூடாது. ஒரு பாஜ தலைவர் கேட்கிறார் திருவள்ளுவர் என்ன திமுகவுக்கு சொந்தமா என்று. திமுக எந்த காலத்திலும் திருவள்ளுவரை சொந்தம் என கொண்டாடவில்லை. ஆனால் திராவிட இயக்கம் இல்லை என்றால் திருவள்ளுவர் யார் என உலகுக்கே தெரியாமல் மறைக்கப்பட்டிருப்பார் என்பது மறுக்க முடியாத உண்மை. இவ்வாறு அவர் கூறினார்.



Tags : Veeramani Interview ,Chief Minister ,
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...