×

கடையம் அருகே பைக் மோதி முதியவர் பலி

கடையம், நவ. 7: கடையம்  அருகே வடமலைபட்டி ராமசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் நயினார் (75). இவர்,  நேற்று முன்தினம் வடமலைபட்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் பைக்கில் வந்த கட்டளையூரை சேர்ந்த சுடலைமாடன் மகன் வேல்முருகன் (30) என்பவர் நயினார் மீது மோதினார். இதில் நயினாருக்கு காலில் முறிவு ஏற்பட்டது. வேல்முருகனும் பலத்த  காயமடைந்தார். இருவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கபட்டனர். அங்கு நயினாரை பரிசோதித்த டாக்டர்,  அவர் ஏற்கனவே இறந்து  விட்டதாக தெரிவித்தார். வேல்முருகன் தீவிர சிகிச்சை பிரிவில்  அனுமதிக்கப்பட்டு உள்ளார். விபத்து குறித்து கடையம் இன்ஸ்பெக்டர்  ஆதிலட்சுமி  வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : shop ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி