தம்மம்பட்டியில் வள்ளுவர் குல சங்க நிர்வாகிகள் கூட்டம்

தம்மம்பட்டி, நவ.7:  சேலம், திருச்சி, பெரம்பலூர் மாவட்ட வள்ளுவர் குல சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம், தம்மம்பட்டியில் நடந்தது. கூட்டத்தில், தஞ்சை பிள்ளையார்பட்டியில், திருவள்ளுவர் சிலையை, அவமதித்த செயலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து, அரசு உடனடி விசாரணை நடத்தி, திருவள்ளுவர் சிலையை அவமதித்தவபர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில், திருவள்ளுவர் குல சங்கத்தின் சேலம் அமைப்பின் நிர்வாகிகள் மூவேந்தன், கொத்தாம்பாடி கலையரசன், ஆத்தூர் ஆறுமுகஜோதி, திருச்சி நிர்வாகிகள், சமயபுரம் கண்ணன், வழக்கறிஞர் கோபிநாதன், முன்னாள் கவுன்சிலர் ராதாvகிருஷ்ணன் மற்றும் பெரம்பலூர் சங்க நிர்வாகிகள் ஜோதிடர் செல்லதுரை, பெரம்பலூர் முன்னாள் கவுன்சிலர் கருணாநிதி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திருவரசன், சிறுவாச்சூர் ராமலிங்க நாயனார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>