×

பெங்களூருவில் இருந்து திண்டுக்கல்லுக்கு லாரியில் கடத்திய 25 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

ஓமலூர், நவ.7:பெங்களூருவில் இருந்து திண்டுக்கல்லுக்கு காய்கறி லாரியில் கடத்தி வந்த ₹25 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து காய்கறி லாரி மூலம் சேலம் வழியே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக ஓமலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் பிரேம்ஆனந்த் தலைமையிலான போலீசார் நேற்று இரவு காமலாபுரம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த காய்கறி லாரியை மடக்கி சோதனை நடத்தியதில், காய்கறி மூட்டைகளுக்கு அடியில் பெட்டியிலும், மூட்டையிலும் புகையிலை பொருட்கள் பதுக்கி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து லாரியை போலீசார் பறிமுதல் செய்து, லாரி டிரைவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் ேமச்சேரியை சேர்ந்த சண்முகம், மணிகண்டன் என்பதும், பெங்களூருவில் இருந்து சேலம் வழியே திண்டுக்கல், கரூர், நாமக்கல்லுக்கு சப்ளை செய்ததும் தெரிந்தது.

லாரியில் 130 பெட்டி, 19 சாக்கு மூட்டைகளில்  புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு 25 லட்சம் ஆகும். இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த லாரி டிரைவர், இதேபோல், பெங்களூருவில் இருந்து 15 முறை புகையிலை பொருட்களை கடத்தி சென்றது விசாரணையில் தெரிந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நாமக்கல்லில் காய்கறி லாரியில் கடத்தப்பட்ட 12 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தது குறிப்பிடத்தக்கதது. பெங்களூருவில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வருவது அதிகரிக்கப்பட்டுள்ளது. அதை தடுக்க போலீசாரும், உணவு பாதுகாப்பு அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Dindigul ,Bangalore ,
× RELATED திண்டுக்கல்லில் ரூ.4.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்