தெருவிளக்கு, சாலை, குடிநீர் வசதிகளை செய்ய வேண்டும் கிராமசபை கூட்டங்களில் மக்கள் வலியுறுத்தல்

அரியலூர், நவ. 7: அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபை கூட்டம் நேற்று நடந்தது.கூட்டத்தில் வேலை உறுதி திட்டம் 2020-21ம் நிதியாண்டில் வேலைகள் மற்றும் தொழிலாளார் நிதிநிலை தயாரித்தல் திட்டம், பொது சுகாதாரம்,டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.மேலும் கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் தங்களது பகுதியில் தெருவிளக்கு, சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.செந்துறையில் ஊராட்சி செயலாளர் அமிர்தலிங்கம் தலைமையில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜக்கண்ணன் முன்னிலையில் கிராமசபை கூட்டம் நடந்தது. வாலாஜாநகர் ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்துக்கு ஊராட்சி செயலர் தமிழ்குமரன் தலைமை வகித்தார். வீட்டுவரி வசூல் உதவியாளர் கண்ணதாசன், சத்துணவு அமைப்பாளர் மாரியாயி மற்றும் மகளிர் சுய உதவி குழுக்கள், இளைஞர் மன்றத்தினர் பங்கேற்றனர்.கோவிந்தபுரம் ஊராட்சியில் நடந்த கிராமசபைக்கு ஊராட்சி செயலாளர் குமாரி, எருத்துக்காரன்பட்டியில் நடந்த கூட்டத்துக்கு ஊராட்சி செயலாளர் கோவிந்தராஜா, உஞ்சினியில் நடந்த கூட்டத்துக்கு ஊராட்சி செயலாளர் ராஜ்குமார், நல்லாம்பாளையத்தில் நடந்த கூட்டத்துக்கு ஊராட்சி செயலாளர் அன்பழகன் தலைமை வகித்தனர்.

Related Stories:

>