×

ஆக்கிரமிப்பின் பிடியில் தீவட்டிப்பட்டி ஏரி

காடையாம்பட்டி, நவ.7: தீவட்டிப்பட்டி ஏரியை ஆக்கிரமித்து கட்டப்படும் கட்டங்களை இடித்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தீவட்டிப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே தீவட்டிப்பட்டி ஏரி உள்ளது. இந்த ஏரியை அப்பகுதியை சேர்ந்த  பொதுமக்கள் ஆக்கிரமித்து 42 வீடுகள் கட்டி 10 ஆண்டுகளுக்கு மேல் குடியிருந்து வந்தனர். இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு உயர்நீதிமன்றம் தமிழகத்தில் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. இதையடுத்து, தீவட்டிப்பட்டி ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 42 வீடுகளை அதிகாரிகள் இடித்து அகற்றினர். இந்நிலையில், தற்போது அதே பகுதியை சேர்ந்த சிலர், ஏரிக்குள் கோயிலை கட்டி ஆக்கிரமித்து வருகின்றனர்.

ஆக்கிரமிப்பை அகற்றி நீர்நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தி, காடையாம்பட்டி ஒன்றிய ஆணையாளரிடம், பொதுமக்கள் சார்பில் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் ஏரிக்குள் சிலர் தொடர்ந்து கட்டிடங்களை கட்டி வருகின்றனர். ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடித்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Lake Thivatapatti ,
× RELATED கொரோனா பிடியில் மகாராஷ்டிரா மாநிலம்.:...