×

டிஎன்பிஎல் சார்பில் ரூ.3.90 லட்சத்திற்கான நலத்திட்ட உதவி வழங்கல்

க.பரமத்தி, நவ.7: டிஎன்பிஎல் சார்பில் ரூ.3.90 லட்சத்திற்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.கரூர் ஒன்றியம் காகிதபுரம் பேரூராட்சியில் இயங்கி வரும் டிஎன்பிஎல் காகித ஆலை பல்வேறு சமுதாயப் நலப்பணி திட்டத்தின் கீழ் ஆலையை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள கோயில் கட்டுமானப் பணிகளுக்கு ரூ.25ஆயிரமும் கோயில் திருப்பணிக்குழு நிர்வாகிகளிடமும் ஏழை நபருக்கு மருத்துவ உதவித்தொகை ரூ.30ஆயிரம் உரியவர்களிடம் வழங்கப்பட்டது.காகித ஆலையை சுற்றியுள்ள 22 மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.2லட்சத்து35ஆயிரத்தை மாணாக்கர்கள் பயிலும் பள்ளி, கல்லூரியின் பெயர்களிலேயே காசோலைகளாக வழங்கப்பட்டது.மாவட்ட ஆசிஹரா கராத்தே கழகத்திற்கு நன்கொடையாக ரூ.20ஆயிரமும், கரூர் மாவட்ட தடகள விளையாட்டுக் கழகத்திற்கு நன்கொடையாக ரூ.10ஆயிரமும், மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சார்ந்த மோகன்ராஜ், நிரஞ்சன் மற்றும் தொண்டைமான்இளந்திரையன் மற்றும் ராஜமாதங்கி ஆகிய 4 பேருக்கு கோலாலம்பூர், மலேசியா நாட்டில் நடைபெறும் உலகக்கோப்பை சிலம்பப் போட்டியில் கலந்து கொள்ள நிதியுதவியாக ரூ30ஆயிரமும் என மொத்தம் ரூ.60ஆயிரத்திற்கான காசோலைகள் வழங்கப்பட்டது.காகித ஆலையில் நடந்த இதற்கான விழாவிற்கு முதன்மை பொது மேலாளர்கள் (மனிதவளம்) பட்டாபிராமன், (உற்பத்தி) தங்கராஜு, (வணிகம் மற்றும் கருவியியல்) பாலசுப்பிரமணியன், முதன்மை தகவல் அலுவலர் மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டு ரூ.3.90 லட்சம் மதிப்பிலான காசோலைகளை உரியவர்களிடம் வழங்கப்பட்டது.


Tags :
× RELATED ஆத்ம நேச ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி விழா