×

15 ஆண்டுகளுக்கு பிறகு கார்வழி நொய்யல் நீர்த்தேக்க அணை நிரம்பியது கரையோர விவசாயிகள் மகிழ்ச்சி

க.பரமத்தி, நவ.7: 15ஆண்டுகளுக்கு பின்னர் கார்வழி அணை நிரம்பி வழிந்துள்ளதால் கரையோர விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.திருப்பூர் மாவட்டத்திலிருந்து நொய்யல் ஆறு துவங்குகிறது. சின்னமுத்தூர் என்ற இடத்தில் நொய்யல் ஆற்றில் தடுப்பணை உள்ளது. இப்பகுதியில் இருந்து அஞ்சூர் ஊராட்சி கொளந்தாபாளையம் என்ற இடத்தில் கரூர் மாவட்ட எல்லையை நொய்யல் ஆறு தொடுகிறது.அங்கிருந்து அஞ்சூர், கார்வழி, துக்காச்சி, முன்னூர், அத்திபாளையம், கரூர் ஒன்றியத்தில் சென்று காவிரியில் கலக்கிறது. இந்த நொய்யல் ஆற்று பாசனத்தை நம்பி சூரியகாந்தி, பருத்தி, நெல், மக்காச்சோளம், கம்பு போன்ற பணப்பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு வந்தனர்.இந்நிலையில் க.பரமத்தி ஒன்றியம் கார்வழி ஊராட்சியில் ஆத்துப்பாளையம் அணையில் நொய்யல் நீர் தேக்கம் 1980ம் ஆண்டில் உயரம் 26.9 அடியும், நீளம் 9,350 அடியும் ஆகும். இங்கு 235 மில்லியன் கனஅடி நீரை தேக்க தேவையான கட்டுமான பணிகள் தொடங்கி 1990ம் ஆண்டு அணை கட்டி முடிக்கப்பட்டதுஇந்த அணை மூலம் நொய்யல் ஆற்றில் மழை வெள்ளம் வரும் உபரி நீரையும், கீழ் பவானி வாய்க்காலில் வரும் கசிவு நீரையும் கார்வழியில் நொய்யல் நீர் தேக்க அணையில் தேக்கி வைத்து வாய்க்கால்கள் மூலம் அஞ்சூர், கார்வழி, துக்காச்சி, தென்னிலை கிழக்கு, முன்னூர், அத்திபாளையம், குப்பம், புன்னம் ஆகிய ஊராட்சிகள் மற்றும் கரூர் ஒன்றியத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் சுமார் 19,000 ஏக்கருக்கு மேல் விளைநிலம் பாசன வசதி பெற்று வந்தன.

அணை கட்டி முடிக்கப்பட்டு 5 ஆண்டுகள் மட்டுமே பாசனத்திற்கு தண்ணீர் கிடைத்தது. அதன்பிறகு திருப்பூர் சாயப்பட்டறை கழிவு நீர் கலந்து வந்ததால் விவசாய கிணறுகள் நீர் மாசடைந்தது. இதனால் பயிர்கள் போதிய வளர்ச்சி இல்லாத நிலை ஏற்பட்டது. மேலும் பொதுமக்களுக்கும் உடல் தொந்தரவுகள் மற்றும் கால்நடைகளுக்கு வயிற்றுப்போக்கு உள்ளிட்ட தொந்தரவுகள் ஏற்பட்டது.பின்னர் ஐகோர்ட் உத்தரவுப்படி அணை 1999ம் ஆண்டு அணை மூடப்பட்டது. இதற்கு நஷ்ட ஈடு கேட்டு விவசாயிகள் மற்றும் பல விவசாய சங்கங்கள் வழக்கு தொடர்ந்து போராடி வருகின்றனர். இதில் சில விவசாயிகள் நஷ்ட ஈடு தொகை பெற்றனர்.பிறகு விவசாய சங்கங்கள் சார்பில் நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு நீர் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். காவிரி ஆறும் மாசு படுவதையும் தடுக்க வேண்டும் அத்தோடு விவசாயத்திற்கு தகுந்த நீரை வழங்குவதால் இதனையே நம்பியுள்ள குடிநீர் மற்றும் கால்நடைகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யப்படலாம் என பாசனம் பெறும் விவசாயிகள் சங்கங்களின் சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கும், அரசுக்கும் கோரிக்கை கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 2 வாரமாக மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரூர் மாவட்டம், கோம்புபாளையம் ஊராட்சி நொய்யல் ஆற்றுநீர் செல்லாண்டிஅம்மன் கோவில் அருகே காவிரி ஆற்றில் சுத்தமான நீருடன் கலந்து வருகிறது.இதனையடுத்து திருப்பூர் மாவட்டம், சின்னமுத்தூரில் உள்ள மதகணையை கடந்த மாதத்தில் திறக்கப்பட்டு நொய்யல் ஆற்று உபரிநீர் ஆத்துப்பாளையம் அணைக்கு வந்தடைந்தது. நேற்று காலை ஆத்துப்பாளையம் அணை 19ஆண்டுகளுக்கு பின்னர் நிரம்பியுள்ளதால் கரையோர விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : Aurora Noel Reservoir Dam ,
× RELATED குளித்தலையில் மாணவரை ஆயுதங்களால் தாக்கிய வாலிபர் கைது