×

நாமக்கல்லில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல், நவ.7:நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (8ம்தேதி) நடைபெறுகிறது. முகாமில், பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு, மேலாளர், கணினி இயக்குபவர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், ஏரியா மேலாளர், டீம் லீடர், கண்காணிப்பாளர்கள், கணக்காளர், காசாளர், தட்டச்சர், மெக்கானிக், சேல்ஸ் அசிஸ்ட்டென்ட் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்ய உள்ளனர். 10ம்  வகுப்பு தேர்ச்சி, தேர்ச்சி பெறாதவர், பிளஸ் 2, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., முடித்த ஆண், பெண் மற்றும் கல்வித்தகுதி உள்ளோரும் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.  இத்தககவலை கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.

Tags : employment camp ,Namakkal ,
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி;...