ரசாயன உரம் இல்லாமல் விளைவித்த காய்கறிகளை உபயோகப்படுத்தி நோய்களை தவிர்ப்போம்

மயிலாடுதுறை, நவ. 7:  ரசாயன உரம் இல்லாமல் விளைவித்த காய்கறிகளை உபயோகப்படுத்தி நோய்களை தவிர்ப்போம் என மருத்துவ முகாமில் அறிவுறுத்தப்பட்டன.மயிலாடுதுறை அருகே உள்ள குத்தாலத்தில் தனியார் நடத்திய மருத்துவ முகாமில் மயிலாடுதுறை எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றும்போது, மனிதனுக்கு வியாதிகள் உண்ணும் பொருள்மூலம் அதிக அளவில் வருகிறது, கண்ணுக்கு நிறமாக இருக்கிறது என்று நாம் வாங்கும் காய்கறிகளில் தேவைக்கு அதிகமாக ரசாயன உரங்கள் போடப்பட்டு விளைவிக்கப்பட்டதே ஆகும்.வீட்டுத் தோட்டம் உள்ளவர்கள், மாடி பகுதி உள்ளவர்கள், வயல் உள்ளவர்கள், முடிந்த அளவிற்கு காய்கறித்தோட்டம் அமைத்து இயற்கையாக ரசாயன உரம் இல்லாமல் விளைவித்த காய்கறிகளை உபயோகப்படுத்தி நோய்நொடிகளை தவிர்ப்போம், காய்கறித்தோட்டம் அமைப்பதால் அதைபராமரிப்பதால் உடலுக்கும் உள்ளத்திற்கும் பயிற்சி கிடைக்கிறது நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கலாம் ஆகவே இயற்கை உரம்விட்டு தயாரித்த பொருட்களை உபயோகப்படுத்தி முடிந்தஅளவிற்கு நோய்நொடி இல்லாமல் வாழவேண்டும் என்றார்.

Tags :
× RELATED காய்கறிகள் விளைச்சல் அதிகரிப்பால் உழவர் சந்தைகளில் வரத்து அதிகரிப்பு